தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விரைவில் 808 FM வானொலி நிலையங்களின் மின்-ஏலம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்!

808 FM வானொலி நிலையங்களின் மின்-ஏலம் விரைவில் நடைபெற உள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

விரைவில் 808 FM வானொலி நிலையங்களின் மின்-ஏலம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்!
விரைவில் 808 FM வானொலி நிலையங்களின் மின்-ஏலம்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்!

By

Published : Jul 23, 2023, 3:02 PM IST

டெல்லி: 1927ஆம் ஆண்டு, ஜூலை 23ஆம் தேதி, பம்பாய் நிலையத்திலிருந்து நாட்டில் முதன்முதலாக வானொலி ஒலிபரப்பானது, இது இந்திய ஒலிபரப்பு நிறுவனத்தால் ஒலிபரப்பப்பட்டது. ஒலிபரப்பு நிறுவனம் #AllIndiaRadio, 1936-ல், உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பாளர்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

1927ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் வானொலி மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அகில இந்திய வானொலியானது, 'பகுஜன் ஹிதாயா, பகுஜன சுகாயா' என்ற தனது முழக்கத்தின்படி உண்மையாக வாழும் மக்களுக்குத் தெரிவிக்கவும், கல்வி கற்பிக்கவும், மகிழ்விக்கவும் சேவை செய்து வருகிறது.

டெல்லியில் உள்ள ஆகாஷ்வானி பவனில் நடைபெற்ற தேசிய ஒலிபரப்பு தின விழாவில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர். எல். முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புச் செயலர் அபூர்வ சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 284 நகரங்களில் உள்ள 808 எஃப்எம் வானொலி நிலையங்களின் மின்-ஏலத்தை அரசாங்கம் விரைவில் நடத்த உள்ளதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23ஆம் தேதி) தெரிவித்து உள்ளார்.

தேசிய ஒலிபரப்பு தினம், ஆண்டுதோறும் ஜூலை மாதம் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி நடைபெற்ற பிராந்திய சமூக வானொலி சம்மேளனத்தில் (வடக்கு) உரையாற்றிய அமைச்சர் தாக்கூர் கூறியதாவது, ''இணக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் வானொலி நிலையங்களை, குறிப்பாக சமூக வானொலியை இயக்க உரிமம் பெறுவதற்கான செயல்முறைகளையும் அரசாங்கம் எளிதாக்கி உள்ளது.

இந்தியாவில் தற்போது 26 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் உள்ள 113 நகரங்களில் 388 FM வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ரேடியோ சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் இப்போது 284 நகரங்களில் 808 சேனல்களின் மூன்றாவது தொகுதி மின்-ஏலத்தை விரைவில் நடத்த திட்டமிட்டு உள்ளது. கவரேஜை மேலும் மேம்படுத்துவதற்காக தொலைதூரப் பகுதிகளில் வானொலி கோபுரங்களை அரசாங்கம் அமைத்து வருவதாக'' அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி உள்ளார்.

இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு அடுக்கு-II மற்றும் அடுக்கு-III நகரங்களில் FM நெட்வொர்க்கை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்து உள்ளது. இது நாட்டில் AIR FM டிரான்ஸ்மீட்டர்களின் கவரேஜை புவியியல் பரப்பளவில் 66 சதவீதமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 80 சதவீதமாகவும் முறையே 59 சதவீதம் மற்றும் 68 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகள், பழங்குடியினர், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எட்டு லட்சத்துக்கும் அதிகமான டிடி இலவச டிஷ் செட்-டாப் பாக்ஸ்களை இலவசமாக விநியோகிக்கவும் திட்டம் உள்ளதாக, அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: தொட்டதற்கு தண்டனையாக முகத்தில் மனித மலத்தை பூசி அராஜகம் - ம.பி.,யில் தான் இந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details