தமிழ்நாடு

tamil nadu

வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பதிலும் சிரமம்! டெல்லிக்கு என்ன ஆச்சு!

By

Published : Nov 11, 2019, 3:25 PM IST

டெல்லி: தலைநகரின் காற்று மாசின் அளவு அபாயகரத்தைத் தாண்டி சென்றதை அடுத்து, கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் காக்க எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

delhi air pollution

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் அபாயகட்டத்தை தாண்டிபோவது அனைவரும் அறிந்ததே. இந்நேரத்தில் டெல்லியில் வாழும் கர்ப்பிணிப் பெண்கள், வயிற்றிலிருக்கும் குழந்தையை எச்சரிக்கையுடன் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து 26 வயது கர்ப்பிணியான கோகவி கூறுகையில், “எங்கள் வீட்டின் கதவுகள் எந்நேரமும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான வேலைகளுக்குக்கூட வெளியில் செல்வதைத் தவிர்த்துவருகிறேன். பிரசவத்தின்போது சுவாச பிரச்னை வருமோ என்ற அச்சம் என்னிடத்தில் உள்ளது.

திணறும் தலைநகர் - அபாய கட்டத்தில் காற்று மாசுபாடு!

அதுமட்டுமில்லாமல் வயிற்றிலிருக்கும் குழந்தைக்குக் காற்று மாசின் மூலம் ஏதாவது நேர வாய்ப்பிருக்கிறது" என்று அவர் கூறினார். உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) நடத்திய பகுப்பாய்வு குறியீட்டின்படி உலகத்தில் மாசடைந்த 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details