தமிழ்நாடு

tamil nadu

'முதலமைச்சர் நிவாரண நிதி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும்' - நாராயணசாமி

By

Published : Mar 23, 2020, 11:27 PM IST

புதுச்சேரி: கரோனாவிற்காக ‘முதலமைச்சர் நிவாரண நிதி’ அளிக்க பொதுமக்கள் , தொழிலதிபர்கள் என அனைவரும் முன்வரவேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி
செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி

கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நேற்று ஊரடங்கு உத்தரவின்போது மக்களுக்காக பணியாற்றியவர்களை முதலமைச்சர் நாராயணசாமி கை தட்டி பாராட்டினார்.

இதையடுத்து இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரியில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுபடுத்துவதற்காகவும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் நிவாரண நிதிக்காக’ அளிக்கவுள்ளார்கள்.

இதேபோல அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி

தொடர்ந்து பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: இலவசமாக முகக்கவசம் வழங்கிவரும் காய்கறி வியாபாரி

ABOUT THE AUTHOR

...view details