தமிழ்நாடு

tamil nadu

குதிரையாறு அணைப்பகுதியில் காட்டு மாடு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 5:37 PM IST

குதிரையாறு அணை
குதிரையாறு அணை (Credits- ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனி அருகே குதிரையாறு அணைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை அழகாபுரியைச் சேர்ந்த வலசுதுரை என்பவர் பூஞ்சோலை உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு வந்த காட்டு மாடு வலசு துரையை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். மேலும், வயிற்றுப் பகுதி மற்றும் கைகளில் குத்தியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் ஆடு மேய்க்கச் சென்ற வலசுதுரையை காணவில்லை என உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே காட்டுப்பகுதிக்குள் வனத்துறையினர் சென்று பார்த்தபோது, குடல் சரிந்த நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்னர், அவரை மீட்ட வனத்துறையினர் பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details