தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

கால்நடை மருத்துவப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:25 PM IST

TN Veterinary and Animal science university
TN Veterinary and Animal science university (File photo - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில் (BVSc & AH, B.Tech) சேர்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இம்மாதம் 21ஆம் தேதி வரையில் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2021-22ஆம் கல்வியாண்டில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு என மொத்தம் 26 ஆயிரத்து 898 விண்ணப்பம் வந்தன. அதேபோல், 2022-23ஆம் கல்வியாண்டில் மொத்தம் 16 ஆயிரத்து 214 விண்ணப்பம் வந்தன.

அதனைத் தொடர்ந்து, 2023-24ஆம் கல்வியாண்டில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு 18 ஆயிரத்து 752 மாணவர்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் சேர 3 ஆயிரத்து 783 பேர் என 22 ஆயிரத்து 535 விண்ணப்பம் வந்த நிலையில், நடப்பாண்டில் அதிக அளவில் விண்ணப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் அறிய:கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது?

ABOUT THE AUTHOR

...view details