தஞ்சாவூர்: தமிழகத்தில் நவராத்திரி திருவிழா துவங்கி கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 4ம் நாளான நேற்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.
அதேபோல், தஞ்சையில் பிரசித்தி பெற்ற கோயில்களான கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் துர்காம்பிகைக்கு சிவபூஜை அலங்காரமும், காளிகா பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு சிவபூஜை அலங்காரமும், எல்லையம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு தபசு அலங்காரமும், சியாமளாதேவி அம்மன் கோயிலில் மாரியம்மன் அலங்காரமும் சிறப்பாகச் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.