தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

பொறியியல் சேர்க்கை; விளையாட்டு வீரர்களுக்கான 500 இடங்களுக்கு 4,489 பேருக்கு அழைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 8:09 PM IST

Anna University
அண்ணா பல்கலைக்கழகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மே 6 முதல் ஜூன் 6 வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தவற்கு உதவிட 110 இடங்களில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களுக்குச் சென்றும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான 500 இடங்களில் சேர்வற்கு விண்ணப்பம் செய்த விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 23 வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் சேர்க்கை மையத்தில் நடைபெறுகிறது. இதற்காக 4,489 விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களின் உண்மைச் சான்றிதழ்களுடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நாளில் நேரில் வர வேண்டும் எனவும், சான்றிதழ்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details