தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோட் பட பேனர் வைப்பதில் தகராறு.. சிதம்பரத்தில் அடித்துக்கொண்ட விஜய் ரசிகர்கள்! - vijay fans clash - VIJAY FANS CLASH

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 12:44 PM IST

கடலூர்: சிதம்பரத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படத்திற்கு பேனர் வைப்பதில் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். 

நடிகர் விஜய், அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு வெளியான முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மூன்று திரையரங்குகளில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. 

இந்த திரையரங்குகளில் முதலில் யார் பேனர் வைப்பது என்ற போட்டி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு தரப்பைச் சார்ந்த சிலர், குறிப்பிட்ட ஒரு  திரையரங்கின் முன் பேனர் வைக்கக் கூடாது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் உருவாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details