வாலிபர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ வைரல்! - Former Minister Vijayabaskar - FORMER MINISTER VIJAYABASKAR
Published : Aug 11, 2024, 1:01 PM IST
புதுக்கோட்டை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அஇஅதிமுக நிர்வாகி வடிவேல் இல்ல காதணி விழாவிற்கு கலந்து கொண்டார். அவர் விழா முடிந்து காரில் திரும்பி செல்லும் போது, வலையப்பட்டி பகுதியில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை பார்த்தவுடன் இறங்கிச் சென்று, அவர்களுடன் வாலிபால் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
பொதுவாகவே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது பெயரில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகடமியை நடத்தி வருகிறார். இந்த அகாடமியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில் அவர் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.