தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எட்டு நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி: கும்பக்கரையில் சுற்றுலா பயணிகள் குதூகலம்! - Tourists allowed in Kumbakarai - TOURISTS ALLOWED IN KUMBAKARAI

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 3:58 PM IST

தேனி: கடந்த 10 நாட்களாக கனமழை மற்றும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தேனி கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறை அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 19ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கனமழை எச்சரிக்கை விளக்கிக் கொள்ளப்பட்டதால், எட்டு நாட்களுக்கு பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 

கோடை விடுமுறை முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில், கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாலையில் இருந்து குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details