தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - NELLAIAPPAR TEMPLE festivel - NELLAIAPPAR TEMPLE FESTIVEL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 3:29 PM IST

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தங்க பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க கொடி ஏற்றம் நடைபெற்றது. தங்க கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட 26 வகையான அபிஷேகத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவர். 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர், தயார் காந்திமதி அம்மன் தேர் உட்பட ஐந்து தேர்கள் நான்கு ரத வீதிகளில் வலம் வர இருக்கிறது. இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details