தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"தேனி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தீர்மானம்" - வலியுறுத்தும் நிர்வாகிகள்! என்ன காரணம் தெரியுமா? - theni news

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 10:58 PM IST

தேனி: நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய பணிகளை துவங்கி விட்டனர். குறிப்பாக பொதுக் கூட்டங்கள் நடத்துவது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது, நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஜெயசிம்மன் நாச்சியப்பன், தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேனி தொகுதியை ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இது குறித்து தேனி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் கூறும் போது "இந்திய கூட்டணியில் இருக்கின்ற திமுக, காங்கிரசுக்கு தேனி தொகுதியை ஒதுக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு ஒதுக்கியது போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸிற்கு தேனி தொகுதி ஒதுக்க வேண்டும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details