Live: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் - TIRUNELVELI MK STALIN CAMPAIGN - TIRUNELVELI MK STALIN CAMPAIGN
Published : Mar 25, 2024, 6:40 PM IST
|Updated : Mar 25, 2024, 7:43 PM IST
திருநெல்வேலி: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருநெல்வேலி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், சிறிது நேரத்திற்கு முன்பு திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுவார் எனவும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இன்று (மார்ச் 25) விமானம் மூலம் தூத்துக்குடி வருகைதந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் நாங்குநேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காட்சிகளை இந்த நேரலையில் காணலாம்.இதற்கு முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துக் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 22) முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 22ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிறுகனூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். அதனை அடுத்து, 23ஆம் தேதி தஞ்சாவூர் மற்றும் நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கொரடாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Last Updated : Mar 25, 2024, 7:43 PM IST