விடிந்தால் தீபாவளி.. நெல்லை கடை வீதிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்! - THIRUNELVELI DIWALI CELEBRATION
Published : Oct 30, 2024, 10:54 PM IST
திருநெல்வேலி: தீபாவளி என்றால் சிறியவர்கள் முதல் பெறியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம்தான். தீபாவளியை முன்னிட்டு கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தீபாவளி பொருட்கள் வாங்க அதிக அளவு மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் நாளை தீபாவளி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மக்கள் ஜவுளி, பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வீதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால் இன்று மாலை முதல் திருநெல்வேலி டவுன் பகுதியில் கடும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது.
இதனால் வீதியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தது. பொதுவாக பண்டிக்கை காலம் என்றாலே திருநெல்வேலி டவுன் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம் என்றாலும் இந்த தீபாவளியை பொறுத்தவரை மிக அதிகளவிலான மக்கள் விரும்பிய பொருட்களை வாங்கி சிறப்பான தீபாவளியை கொண்டாட அயாராது பர்சேஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை கட்டுபடுத்தும் வகையில் ஆங்காங்கே போக்குவரத்து காவல் துறையினர் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.