தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவையில் இளைஞர் மீது தனியார் பேருந்து ஏறி விபத்து.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்! - private bus hits youth - PRIVATE BUS HITS YOUTH

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:18 PM IST

கோயம்புத்தூர்: அடையாளம் தெரியாத நபர் மீது தனியார் பேருந்து ஒன்று மோதிச் செல்லும் சிசிடிவி வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில், கடந்த மே 13ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் இளைஞர்ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருந்ததைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் தனியார் பேருந்து ஒன்று, அந்த இளைஞர் மீது ஏறிச் சென்றதும், பின்னர் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவர் சேர்ந்து அடிபட்ட இளைஞரை ஓரமாக படுக்க வைத்துவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. 

பின்னர் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த ஓட்டுநர் சிவராஜ் மற்றும் உதவியாளரை இன்று (மே 17) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details