LIVE: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ! - PM Modi Roadshow Chennai - PM MODI ROADSHOW CHENNAI
Published : Apr 9, 2024, 6:35 PM IST
|Updated : Apr 9, 2024, 7:13 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.அந்த வகையில், தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பனகல் பார்க், பாண்டி பஜார், தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகன பேரணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால் கனகராஜ் ஆகிய மூவருக்கும் ஆதரவாக பிரதமர் மோடி இந்த ரோடு ஷோ பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரடி காட்சிகளைக் காணலாம்..பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியை முன்னிட்டு, சென்னை தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அதனை ஒட்டி உள்ள வெங்கட் நாராயணன் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன பேரணி பிரச்சாரம் முடியும் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 9, 2024, 7:13 PM IST