தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: நந்தனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி..! - BJP

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 6:12 PM IST

Updated : Mar 4, 2024, 7:37 PM IST

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக-வின் கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விழா மேடையில் பேசிவரும் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.இதற்கு முன்னதாக அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.04) ஒருநாள் பயணமாக மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வருகைதந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கத்திற்குச் சென்று, கல்பாக்கம் ஈனுலைத் திட்டத்தை அவர் பார்வையிடு துவங்கிவைத்தார்.மேலும், இந்த ஈனுலைத் திட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பங்கேற்கும் கல்பாக்கம் ஈனுலைத் திட்ட துக்க விழா, அரசு விழாவாக இருந்தாலும் அதில் பங்கேற்கவில்லை.கல்பாக்கம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் பாஜக-வின் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உறையாற்றிவருகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, சென்னையில் இன்று (மார்ச்.04) முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதோடு ஐந்தடுக்கு பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 4, 2024, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details