Live:'என் மண் என் மக்கள்' நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரை!
Published : Feb 27, 2024, 4:03 PM IST
|Updated : Feb 27, 2024, 4:56 PM IST
திருப்பூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றி வருகிறார். அதன் நேரலை காட்சிகளை தற்போது பார்த்து வருகிறோம்.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையைத் தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இதன் தொடக்கவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற இந்த யாத்திரையின் நிறைவு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரி வேந்தன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Feb 27, 2024, 4:56 PM IST