கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்கள்.. பூத்து குலுங்கி வரவேற்கும் உதகை தாவரவியல் பூங்கா! - Ooty botanical garden - OOTY BOTANICAL GARDEN
Published : Sep 26, 2024, 5:03 PM IST
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் தற்போது இரண்டாம் சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். பூங்காவில் அழகிய பூத்தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை அடுக்கி அவற்றை பராமரித்து, கண்காட்சிகாக தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் மேரி கோல்டு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆண்டர், வெற்பினா, லூபின், கேண்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுனியா போன்ற செடிகள் நடப்பட நிலையில் தற்போது அவை பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றனர். இவை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.