தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவையில் திடீரென பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. பயணிகளின் நிலை என்ன? - Omnibus fire accident - OMNIBUS FIRE ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 10:40 AM IST

கோயம்புத்தூர்: ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று(ஜூலை 21) இரவு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு இன்று(ஜூலை 22) அதிகாலை கோவை வந்தடைந்தது. 30 பயணிகளுடன் வந்த அந்த தனியார் பேருந்து, கோவை சித்ரா கே.எம்.சி.எச்.(KMCH) மருத்துவமனை அருகே வந்த போது, திடீரென புகையுடன் கூடிய தீப்பற்றியுள்ளது. 

அதனைக் கண்டு சுதாரித்த பேருந்து ஓட்டுநர், பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து உடனடியாக கீழே இறக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே ஆம்னி பேருந்து முழுவதுமாக தீ பரவியுள்ளது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பீளமேடு தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், அதற்கு பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. 

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீ விபத்துக்கான காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டனர். தற்போது, முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், நல்வாய்ப்பாகப் பேருந்து ஓட்டுநரின் துரித செயலால், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.  

ABOUT THE AUTHOR

...view details