LIVE: மத்திய பட்ஜெட் 2024: 7வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - நேரலை - UNION BUDGET 2024 - UNION BUDGET 2024
Published : Jul 23, 2024, 11:02 AM IST
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 7வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். முன்னாள் முதலமைச்சர் மொராஜி தேசாய்க்கு பின் 6 முறைக்கு மேல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் நிர்லமா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.