LIVE: மத்திய இடைக்கால பட்ஜெட் நேரலை காட்சிகள்! - பட்ஜெட் சிறப்பம்சம்
Published : Feb 1, 2024, 11:02 AM IST
|Updated : Feb 1, 2024, 12:04 PM IST
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் நேற்று(ஜன.31) தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார் அதன் நேரலை காட்சிகள்..
தேர்தல் காலம் என்பதால் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி அமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய அவர், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: Budget 2024 Live Update: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் என்ன?