தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / videos

தீபாவளி பண்டிகை ஊட்டியில் கோ ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்! - Co Optex

நீலகிரி: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,"தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள் உள்பட ஏராளமான ஜவுளி ரகங்கள் உள்ளன. 

இதில் சிறப்பம்சமான தோடர் இன மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்ராய்டரி சால்வைகள் மற்றும் டேபிள் ரன்னர் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் தீபாவளி விற்பனையாக 75 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கோ-ஆப்டெக்ஸ்ஸில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் விற்பனை நன்றாகவே உள்ளது" எனத் தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details