தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஆதி - நிக்கி கல்ராணி குடும்பத்தினருடன் திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம்! - nikki galrani darshan at temple - NIKKI GALRANI DARSHAN AT TEMPLE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 4:56 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி பல்வேறு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இதனால் இக்கோயிலில் 60 வயதில் சஷ்டிப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 75 வயதில் விஜயரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், நூறு வயதில் பூரணா அபிஷேகம், 120 வயதில் மகுடாபிஷேகம் செய்து வயதான தம்பதிகள் ஆயுள் விருத்தி அடைவது ஐதீகம். 

அந்த வகையில், இக்கோயிலில் இன்று பிரபல தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டி, அவரது மனைவி ராதாராணி பினிசெட்டியின் 76வது வயது பூர்த்தியை முன்னிட்டு, விஜய ரத சாந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவில் இவரது மூத்த மகனும், இரண்டாவது மகனுமான ஆதி - நிக்கி கல்ராணி குடும்பத்தோடு பங்கேற்றனர்.

முன்னதாக, கோயில் நிர்வாகம் சார்பில் ரவிராஜா பினிசெட்டி குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்துஞ்சிய ஹோமம், ஆயுள் ஹோமங்களை கணேச குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள் செய்தனர். 

பின்னர், தம்பதிகள் அனைவரும் மாலை மாற்றிக் கொண்டு புனித நீர் அடங்கிய கலசங்களை கையில் ஏந்தியவாறு கோயிலைச் சுற்றி வந்தனர். அதன்பின் வெளிப்பிரகாரத்தில் தம்பதிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் உள்ள சாமி சன்னதிகளுக்குச் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details