தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - Poet Mayuram Vedanayagam Pillai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 12:11 PM IST

மயிலாடுதுறை: ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில், கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அரங்கம் அமைக்கும் கட்டடப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், "கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததை அடுத்து, செய்தித்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் மொழி தியாகிகள், மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் பராமரிப்பு பணி மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு அரங்கம் கட்டுமானப் பணிகளை இன்று ஆய்வு செய்தேன். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில், ஒரு சில மாற்றம் செய்யலாமா? என்று ஆலோசனை செய்கிறோம். மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கை பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வருகிறது. 

வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. வரும் பிப்.2 ஆம் தேதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதைத்தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் வரும் நிதியாண்டில் சீரமைப்பதற்கு நிதிநிலைக்கு ஏற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details