லேடிஸ் கோச்சில் சீட்டு விளையாடிய ஆண் பயணிகள்.. வைரலாகும் வீடியோ! - Mens playing cards in ladies coach - MENS PLAYING CARDS IN LADIES COACH
Published : Sep 15, 2024, 7:56 PM IST
மயிலாடுதுறை: பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்து சீட்டுக்கட்டு விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
திருச்சி, சென்னை உள்ளிட்ட மார்க்கத்தின் வழியாக மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. இதில் தினந்தோறும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் மெமு ரயிலில், பெண்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் ஆண்கள் அமர்ந்து சீட்டுக்கட்டு விளையாடிய காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண்கள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் இருக்கைக்கு கீழே அமர்ந்து பயணம் செய்கின்றனர். மேலும், “இது மகளிர் ரயில் பெட்டியா? இல்லை ஆண்கள் விளையாடும் மைதானமா?” என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்த வீடியோ வைரலான நிலையில், மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பெண்களுக்கென்று தனிப்பெட்டி ஒதுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.