தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணி; LGBTQ சமூகத்தினர் உற்சாகம்! - LGBTQ pride parade - LGBTQ PRIDE PARADE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 2:17 PM IST

கோயம்புத்தூர்: ஜூன் மாதத்தின் முதல் வாரம் உலகம் முழுவதும் LGBTQ சமூகத்துக்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலை பகுதியில் வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகள் அணிந்து கலந்து கொண்டனர். ரேஸ்கோர்ஸ் தாமஸ் பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி பந்தய சாலையை சுற்றி வந்து தாமஸ் பூங்காவில் நிறைவடைந்தது. 

விழாவில் LGBTQ அடையாளத்தை உணர்த்தும் வகையில் ஆண், பெண் என்று வரையறுக்கப்பட்டுள்ள ஆடைகள், சிகையலங்காரங்களை அவரவர் உணர்வுகளுக்கு பிடித்தாற்போல் அலங்காரம் செய்து வந்தனர். மேலும் இந்த பேரணியில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட LGBTQ சமூகத்தினர் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும் பறை இசையுடன், வானவில் கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு வானவில் சுயமரியாதை பேரணி சென்னையில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details