LIVE: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு! - bjp
Published : Mar 5, 2024, 5:01 PM IST
|Updated : Mar 5, 2024, 5:28 PM IST
நாகர்கோவில்: சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். முன்னதாக, பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் “தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தைக் கொள்ளை அடிக்க விடமாட்டேன். எந்த பணத்தை நீங்கள் கொள்ளை அடித்தீர்களோ அந்த பணம் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும் இது மோடியின் உத்தரவாதம் எனவும், திமுகவின் அமைச்சர் ஒருவரிடம் உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி மிதிப்பதும் கூட குடும்ப அரசியல் நடத்துபவர்களின் லட்சியம் அடையாளம்.குறிப்பாக, என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தங்கு தடை இன்றி அணைத்து இடங்களிலும் கிடைத்து வருகிறது. இது என்னுடைய மனதிற்கு மிகவும் கவலையாக இருந்து வருகிறது. உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் கட்சிக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நாளைய தலைமுறைகளையும் இந்த போதைப் பொருள்கள் அழித்துவிடும்” எனப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Mar 5, 2024, 5:28 PM IST