திடீரென பற்றி எரிந்த பைக்..கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு! - Koyambedu Market BIKE FIRE ACCIDENT - KOYAMBEDU MARKET BIKE FIRE ACCIDENT
Published : Sep 19, 2024, 8:52 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையானது பொதுவாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று காய்கறி சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரின் இருசக்கர வாகனமானது திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அருகில் இருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கிருந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர சணல் கோணிகளால் அடித்தும், தண்ணீரை ஊற்றியும் தீ பரவாமால் தடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு துறையின் வீரர்கள் நெருப்பை முற்றிலுமாக அணைத்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது. சமீபகாலமாக சென்னையில் அங்கங்கு வாகனங்கள் தீ பற்றி எரியும் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் நிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.