தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: இந்திய விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி! - 92nd Indian Air Force Day - AIR FORCE DAY PARADE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 8:16 AM IST

Updated : Oct 8, 2024, 11:03 AM IST

சென்னை: இந்திய விமானப் படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஐஏஎஃப் (IAF) அதிகாரிகளின் துணிச்சல், அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றைக் கௌரவிக்கும் விதமாக, IAF அணி வகுப்பு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறும். அந்த வகையில், வான்வழிக் காட்சிகள், பேரணிகள், அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சாகசம் நிகழ்த்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக, சென்னை மெரினா கடற்கரையில் அக்.6 ஆம் தேதி விமான சாகச நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை 11 மணி முதல் 1 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இந்த நிலையில், இன்று (அக்.8) காலை 8 மணிக்குத் தாம்பரத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப் படை வீரர்களின் அணி வகுப்பு நடைபெறுகிறது. அதன் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்...
Last Updated : Oct 8, 2024, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details