நீலகிரியில் உறைபனி.. வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்..! - frost
Published : Jan 27, 2024, 10:12 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் தொடங்கிய பின் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக உதகையில் உறைபனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது.
நீர் பனி மற்றும் உறைபனியின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலையே நிலவுகிறது.ன் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று 2.5 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி உள்ளது.
இதன் காரணமாக உள்ளூர் வாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கடும் குளிர் காரணமாகச் சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. உதகை ரோஜா பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உறைபனியின் தாக்கத்தால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்னும் மூன்று தினங்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.