தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி விஜய்க்கு மட்டுமே உள்ளது" - தவெக மாவட்டச் செயலாளர்! - TAMILAGA VETtRI KAZHAGAM - TAMILAGA VETTRI KAZHAGAM

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 9:29 PM IST

திருச்சி: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அறிவுறுத்தலின்படி, இன்று திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

அந்த வகையில், திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மத்திய மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் செந்தில்குமார், “தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, இல்லாதவர்களுக்கு உணவு வழங்கினோம். 

இந்த பகுதியில் மட்டும் 500 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், கோடை வெயிலின் தாக்கத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை நிலவிய போது, இலவச நீர், மோர் பந்தல் திருச்சி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிறுவப்பட்டு, பொதுமக்களுக்கு மோர், இளநீர் போன்ற குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. எங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து செய்து வருகிறோம். 

2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, முழுமையாக எங்களை அர்ப்பணித்து பணியாற்றுவோம். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவி ஏற்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி விஜய்க்கு மட்டுமே உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். தலைவர் விஜய் என்ன சொல்கிறாரோ, அதை கட்டளையாக ஏற்று நாங்கள் செயல்படுவோம். தலைவரின் கருத்தே எங்களுடைய கருத்தாகும். எங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் ஏதுமில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details