தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராமேஸ்வரம் முழுவதும் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை! - Pani Puri shop inspection in TN - PANI PURI SHOP INSPECTION IN TN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 12:04 PM IST

ராமநாதபுரம்: கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் பானிபூரி கடைகளை சாலை ஓரத்தில் அமைத்து விற்பனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் முறையான ஆவணங்கள் இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு விற்பனை செய்யப்படும் பானிபூரிகள் தரமற்ற முறையில் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் முறையான ஆவணங்கள் இன்றி அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தி பின்னர் தரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பானிபூரி மற்றும் பானிபூரியில் கலந்து உண்ணக்கூடிய ரசம் உள்ளிட்டவற்றை அழித்தனர். மேலும் இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details