கோவை பேன்சி ஸ்டோரில் தீ விபத்து..கடை முழுவதும் எரிந்து சேதம்..! - கடையில் தீ விபத்து
Published : Feb 13, 2024, 1:14 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், தொப்பம்பட்டி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பேன்சி கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு (பிப்.12) வழக்கம் போல், கடையின் உரிமையாளர் தனது கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவில் கடையிலிருந்து கரும்புகைகள் வெளியே வந்தபடி, திடீரெனக் கடை முழுவதுமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக, தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பேன்சி கடைக்குள் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகின. இந்த தீ விபத்து தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எவ்வாறு தீ பிடித்தது, மின் கசிவு காரணமாக இருக்கலாமா? அல்லது வேறு யாரெனும் தீ வைத்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென பேன்சி கடை முழுவதும் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.