தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தண்ணீர் இன்றி தவிக்கும் யானைகள்..வனத்தை விட்டு வெளியேறி அணையில் முகாமிடும் அவலம்! - Elephants suffering without water - ELEPHANTS SUFFERING WITHOUT WATER

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 1:03 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்த தண்ணீர் முற்றிலும் வற்றிவிட்டது. 

இதன் காரணமாக காட்டு யானைகள் குடிநீர் மற்றும் உணவுகளைத் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு படையெடுக்கின்றன. இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள அணையின் மேல் பகுதிக்கு செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையில் முகாமிட்டன. 

வறட்சியால் இலைகள் உதிர்ந்த புளியமரங்களின் கிளைகளை முறித்தும் கீழே விழுந்த புளியம் பழங்களை மூன்று காட்டு யானைகளும் தீவனமாக உட்கொண்ட படியும், தனது தும்பிக்கையால் மண்ணை வாரி தூற்றிய படியும் சுற்றித் திரிந்தன. 

இதன் காரணமாக அணையின் மேல் பகுதிக்கு பணிக்கு செல்வதற்காக அவ்வழியே இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாலையில் காட்டு யானைகள் நிற்பதைக் கண்டு அச்சமடைந்தனர். சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணையின் மேல் பகுதிக்கு சென்றனர்.

அணையின் கரையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

கோடை வெயிலின் தாக்கம் அதிகாரித்து காணப்படுவதால் குளங்கள் வறட்சியின் பிடியில் உள்ளனர். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே வனவிலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details