தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்! - EPS Madurai Campaign - EPS MADURAI CAMPAIGN

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:12 PM IST

Updated : Mar 28, 2024, 9:32 PM IST

விருதுநகர்/ராமநாதபுரம்: அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று (மார்ச் 28) பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகள்..கடந்த 24ம் தேதி முதல் சேலத்திலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து சிவகாசி பாவாடிதோப்பு திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ராஜேந்திர பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.பின்னர், ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பெருமாளை ஆதரித்து இரவு 7 மணியளவில் ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக,  சிவகாசி பட்டாசுத் தொழிலதிபர்கள் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து சரவெடி பின்னுவதற்கும், பச்சை உப்பை பயன்படுத்துவதற்கும், தடையில்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். 
Last Updated : Mar 28, 2024, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details