தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பனிமய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி; ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனை.. - Easter Festival 2024 - EASTER FESTIVAL 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 9:09 AM IST

தூத்துக்குடி: ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருவது வழக்கம். ஈஸ்டர் பண்டிகை (Easter 2024) என்பது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மனுத குலத்தை காப்பதற்காக மண்ணில் அவதரித்த இயேசுபிரான், இறுதியில் சிலுவையில் அரையப்பட்டு, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் நிகழ்வே, ஈஸ்டர் பண்டிகை. 

இதில், இயேசு மறிக்கப்படும் நாள் புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழும் நாள் உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்) என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதியான இன்று (ஞாயிறு) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் மற்றும் இருதய ஆண்டவர் கோயிலில், இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. 

மேலும், பனிமயமாதா கோயில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையிலும், இருதய ஆண்டவர் கோயிலில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details