காட்டாற்று வெள்ளம் சூழ்ந்த பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோயில்! பக்தர்கள் வருகைக்குத் தடை - POLLACHI PALARU ANJANEYA TEMPLE
Published : Oct 21, 2024, 6:56 PM IST
கோயம்புத்தூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (அக்.20) முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் அனைமலை வட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று அமைந்து உள்ளது. அந்த வழியாக பாலாறு, உப்பாறு போன்ற சிற்றார்களில் இருந்து கோயிலை அடுத்து உள்ள ஓடையை நீர் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றைய தினம் மற்றும் இன்று காலை பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வழக்கமாக பாலாற்றங்கரை ஓடையை கடந்து செல்லும் நீரின் அளவு அதிகரித்திருந்ததால் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் காற்றாற்று வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.