மின்னல் வேகத்தில் மொட்டை மாடியில் இருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை! - cctv footage - CCTV FOOTAGE
Published : Aug 19, 2024, 1:21 PM IST
நீலகிரி: உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் நேற்று உலாவிக் கொண்டு இருந்த சிறுத்தை ஒன்று, வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது. இது தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ள மாவட்டமாகும். இங்கு கரடி, யானை, புலி, மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இங்குள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் வன விலங்குகளால் சில நேரங்களில் அப்பகுதி மக்களை தாக்குவதால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு வன விலங்குகளின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.