தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE: திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார் எடப்பாடி பழனிசாமி! - Edappadi Palaniswami Trichy

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 6:46 PM IST

Updated : Mar 24, 2024, 7:41 PM IST

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை திருச்சியில் தொடங்க உள்ளார். அந்த வகையில், அதிமுக தலையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். இதற்காக, ஶ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோயில் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈபிஎஸ் திருச்சி வந்தடைந்தார். பின்னர், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, வண்ணாங்கோயில் அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டுகிறார். இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 
Last Updated : Mar 24, 2024, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details