தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

tvkmaanadu: விஜயின் த.வெ.க. முதல் அரசியல் மாநாடு..விக்கிரவாண்டியில் இருந்து நேரலை காட்சிகள்! - VIJAY TVK CONFERENCE LIVE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 3:38 PM IST

சென்னை: தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் சனிக்கிழமை (அக்.26) மாலை முதலே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் மாநாடு நடைபெறும் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுநாள்வரை திரையில் மட்டுமே பார்த்து ரசித்து வந்த தங்களது நாயகனை நேரில் காணும் ஆவலுடனும், அரசியல் பிரவேசம் செய்துள்ள தங்களின் தளபதி மேடையில் என்ன அறிவிப்புகளை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடனும் லட்சோபலட்ச தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். விஜயின் த.வெ.க முதல் அரசியல் மாநாட்டின் நேரலை காட்சிகள் விக்கிராவாண்டியில் இருந்து இதோ உங்களுக்காக..

ABOUT THE AUTHOR

...view details