விஜயின் தவெகவில் சேருவீர்களா? - நடிகர் ஜீவா அளித்த பதில் என்ன? - JEEVA VISIT TIRUCHENDUR TEMPLE
Published : Oct 30, 2024, 11:04 PM IST
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற நடிகர் ஜீவா சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்த பிறகு சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் ஜீவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிளாக் திரைப்படம் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என திருச்செந்தூர் முருகனிடம் வேண்டுக்கொள்ள வந்தேன். இதற்கு முன்பு ராம், கோ ஆகிய படங்கள் வெற்றியடைய வேண்டி வருகை தந்தேன் என்றார். அவரிடம் அடுத்து என்ன படங்களில் நடித்து வருகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதை இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றார். மேலும், நடிகர் விஜயின் கட்சியில் சேர்வீர்களா? என்ற கேள்விக்கு "நான் முருகனை தான் தரிசனம் செய்ய வருகை தந்துள்ளேன்" எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அவர் கோயில் வளாகத்தில் பேட்டரி காரில் வந்து இறங்கியபோது ரசிகர்கள் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.