தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தருமபுரியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்.. திரௌபதி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! - Aadi Perukku festival - AADI PERUKKU FESTIVAL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:52 PM IST

தருமபுரி: ஆடி 18ம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரியில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

ஆடி 18ஆம் நாள் மகாபாரதப் போரில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றி பெற்ற தினமாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தருமபுரி அன்னசாகரம் பகுதியில் பதினெட்டாம் போர் தெருக்கூத்து நாடகம் நேற்று இரவு நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, இன்று (ஆக்ஸ்ட் 3) திரௌபதி அம்மன் கோயிலுக்கு முன்பாக துரியோதனன் உருவத்தை மண்ணால் செய்து, தெருக்கூத்து கலைஞர்கள் பீமன், கிருஷ்ணர், திரௌபதி வேடமணிந்து, பீமன் துரியோதனனை கதை ஆயுதத்தால் வீழ்த்தி, ரத்தத்தை திரௌபதியின் கூந்தலில் தடவி சபதத்தை முடிப்பது போன்று தத்ரூபமாக நடித்தனர்.

இதனையடுத்து, சுவாமி கங்கை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி ஊர்வலமாக வந்து, கோயில் முன்பாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி வழிபாடு நடத்தினர். இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details