தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை.. அச்சத்தில் உறைந்த பயணிகள்! - WILD ELEPHANT BLOCKED A GOVT BUS - WILD ELEPHANT BLOCKED A GOVT BUS

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 8:15 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.

இந்த நிலையில், இன்று (ஏப்.25) அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காடகநல்லி மலைக் கிராமத்திற்குச் செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்தப் பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அந்த அரசுப் பேருந்து வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இரு பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டு யானை நடமாடுவதை பார்த்துள்ளனர். இதனை அடுத்து, யானை நடமாட்டத்தைக் கண்ட ஓட்டுநர், பேருந்தை நிறுத்தியதும், அந்த யானை பேருந்தின் அருகே வந்து நகராமல் நின்றுள்ளது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சில பயணிகள், தங்களது செல்போன்களில் காட்டு யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். சுமார் 1 மணி நேரம் பேருந்தை வழிமறித்த காட்டு யானை, ஏதும் செய்யாமல் அமைதியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இதனை அடுத்து, அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details