கஞ்சா போதையில் சிறுவனை கத்தியை வைத்து தாக்கிய 17 வயது சிறுவன்.. வைரலாகும் வீடியோ! - Video Of Boy Attacked With Knife - VIDEO OF BOY ATTACKED WITH KNIFE
Published : Jul 28, 2024, 7:30 PM IST
சென்னை: வடசென்னை பகுதியைச் சேர்ந்த சுதா என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 17 வயதான இளைய மகன் மீது அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 17 வயதான அந்த சிறுவன் கஞ்சாவை பற்றவைத்து புகைத்து சக நண்பர்களோடு சேர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆபாசமாக திட்டியபடி கையில் கத்தியுடன் சிறுவனை மிரட்டி தாக்கியுள்ள காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும், அந்த சிறுவன் காலை தொட்டு தன்னை விட்டுவிடும்படி கேட்டும் போதையில் இருந்த அந்த 17 சிறுவன் தொடர்ந்து கத்தியால் அந்த மற்றொரு சிறுவனை அடித்துள்ளார். அப்போது, அந்த சிறுவன் அழுது புலம்புவதும், அதை போதை உள்ள பிற சிறுவர்கள் ரசிப்பதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது, தாக்கப்பட்ட சிறுவன் தன்னை விடும்படி அழுதுகொண்டே சத்தம் போடும்போது, சத்தம் போடாதே என மிரட்டியபடி அந்த 17 வயது சிறுவன் தொடர்ந்து தாக்கும்படியான காட்சிகள் அந்த வீடியாவில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.