தமிழ்நாடு

tamil nadu

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: கோவையில் 24 மணி நேரம் ராமாயணம் பாடும் நிகழ்ச்சி தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 4:11 PM IST

24 மணி நேரம் ராமாயணம் பாடும் நிகழ்ச்சி

கோயம்புத்தூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை (ஜனவரி 22) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகக் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள பஞ்சாபி அசோசியேசன் வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான் சீதை மற்றும் லட்சுமணன், அனுமாருடன் இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமாயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் பெண்கள் ஒன்று கூடி ராமாயண பதிகம் பாடியும் தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். இன்று பகல் 12 மணிக்குத் துவங்கியுள்ள இந்த ராமாயணம் பாடும் நிகழ்ச்சியானது நாளை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details