விவோ நிறுவனம், தங்களின் 'வி' குடும்பத்தில் புதிய உறுப்பினரை சேர்க்கிறது. அந்த வகையில், விவோ வி40e (Vivo V40e) ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் விலை மற்றும் அம்சங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அதன்படி, புதிய விவோ ஸ்மார்ட்போன் ரூ.29,999 எனும் விலையில் அறிமுகமாகும் என்று கணித்துள்ளோம். செப்டம்பர் 27 வரவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சலுகை விற்பனை தினங்களில், இந்த மொபைலை கூடுதல் சலுகைகளுடன் வாங்கலாம்.
நமக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இன்று (செப்டம்பர் 25) பகல் 12 மணிக்கு விவோ V40e வெளியாகிறது. இதை பிளிப்கார்ட் ஷாப்பிங் (Flipkart shopping) தளம், விவோ இந்தியா இணையதளம் ஆகியவற்றில் இருந்து முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். ராயல் புரான்ஸ் (Royal Bronze), மின்ட் கிரீன் (Mint Green) ஆகிய இரு நிறங்களில் விவோ V40e விற்பனைக்கு வருகிறது.
எதிர்பார்க்கப்படும் விவோ வி40e அம்சங்கள்:
விவோ வி40e போன் மின்ட் கிரீன் நிறம் (Vivo India) விவோ நிறுவனம் சில தகவல்களை தங்களின் இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி, விவோ வி40e மொபைல் அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க:
- பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி! - Flipkart offers on mobiles
- பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே: ரூ.7000 இருந்தால் போக்கோ 5ஜி போன் வாங்கலாம்! - Poco 5G phone offer Flipkart
- திரை: விவோ வி40e போனில், 6.77-அங்குல வளைந்த 3டி முழு-எச்டி+ (2392x1080) அமோலெட் திரை, 120Hz ரெப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, பி3 கலர் கேமட் உடன் இருக்கும்.
- கேமரா: பின்பக்க கேமராவைப் பொருத்தவரை, விவோ வி40e போனில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. ஒன்று 50 மெகாபிக்சல் (Megapixel) சோனி IMX882 முதன்மை சென்சாராகவும், மற்றொன்று 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் ஆகவும் செயல்படும். இதில் பிளாஷுக்காக ஆரா லைட் (Aura light) இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக பெரிய 50 மெகாபிக்சல் Eye ஆட்டோ ஃபோக்கஸ் சென்சார் வழங்கப்படுகிறது.
- AI அம்சங்கள்: இந்த போனிலும் ஏஐ போட்டோ என்ஹேன்சர், ஏஐ எரேசர் போன்ற அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளது.
- பேட்டரி: இந்த ஸ்மார்ட்போனை பெரிய 5,500 mAh பேட்டரி இயக்குகிறது. இது 80W விரைவான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
- எடை: விவோ வி40e போன் 0.74 சென்டிமீட்டர் தடிமன், 183 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
விவோ வி40e பேட்டரி (Vivo India) புதிதாக அறிமுகமாகும் விவோ வி40e ஸ்மார்ட்போன் சுமார் ரூ.30,000 எனும் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், நத்திங் போன் (2ஏ) பிளஸ், மோட்டோரோலா எட்ஜ் 50, ஒன்பிளஸ் நார்டு 4 ஆகிய ஸ்மார்ட்போன்களும் இதே விலை அமைப்பில் சந்தையில் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
- மாருதி ஸ்விஃப்ட் CNG 2024: மூன்று ஆப்ஷன்கள், சிறந்த மைலேஜ், பட்ஜெட் விலை! - New Maruti Swift CNG Mileage
- முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது! - mudra loan online apply