தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

மழை எச்சரிக்கைகள்: மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கைகள் என்ன சொல்லுகிறது?

வானிலை நிலவரங்களில் மழைக்கான எச்சரிக்கை குறியீடுகள் உள்ளன. அதன்படி, வானிலை ஆய்வு மையம் கூறும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற எச்சரிக்கைகளுக்கான முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

By ETV Bharat Tech Team

Published : 6 hours ago

understanding rain alerts what do yellow orange red alerts mean
மழை எச்சரிக்கைகள் (Etv Bharat)

பேரிடர் காலங்களில் வானிலை எச்சரிக்கைகள் மக்களை பாதுகாப்பாக இருக்க தயார் படுத்துகின்றன. மழை ஏற்பட்டால், வானிலை ஆய்வு மையங்களில் இருந்து மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறக் குறியீடுகள் வாயிலாக எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இது மழையின் தீவிரத்தன்மை, வெள்ள அபாயம், மழை தொடர்பான பிற அபாயங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த எச்சரிக்கைகளை புரிந்துகொள்வதன் மூலம், மக்களும், அதற்கு பொறுப்புள்ள அலுவலர்களும் பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

'மஞ்சள்' மழை எச்சரிக்கை: விழிப்புணர்வாக இருங்கள்!

மஞ்சள் எச்சரிக்கை என்பது பொதுவாக முதல்நிலை வானிலை எச்சரிக்கையாகும். இது மிதமான அல்லது அதற்கு சற்று மேலான மழையை குறிக்கிறது.

  • தீவிரம்: மிதமான மழை, இது சாதாரண வாழ்க்கைக்கு சற்று இடையூறாக இருக்கலாம்.
  • அபாய நிலை: குறைந்தபட்ச அளவிலான வெள்ளம் அல்லது நீர்த்தேக்கம் காணப்படும்.
  • நடவடிக்கை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை கவனித்துக்கொண்டு, தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். நீர் தேங்கும் பகுதிகளை சரிபார்க்கவும்.

மஞ்சள் நிறக் குறியீடு, பொதுவாக மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்துகிறது. இவ்வாறான எச்சரிக்கை கிடைக்கும் போது, மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனித்துக்கொள்வது நல்லது.

'ஆரஞ்சு' மழை எச்சரிக்கை: தயாராக இருங்கள்!

ஆரஞ்சு எச்சரிக்கை என்பது தீவிரமான முதல் மிகுந்த மழைக்கு சமமாகும். இது பெரிய அபாயம் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

  • தீவிரம்: நீண்ட நேரம் நீடிக்கும் கடுமையான மழை, பெரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
  • அபாய நிலை: தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, போக்குவரத்து பாதிப்புகள்.
  • நடவடிக்கை: அவசரநிலையைத் தவிர்த்து ஒருபோதும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. குறைந்தபட்சமாக சிக்கல் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

ஆரஞ்சு எச்சரிக்கைகள் பொதுவாக முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அரசாங்கமும் மக்களும் வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இது ஒரு முன்னறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.

'சிவப்பு' மழை எச்சரிக்கை: உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்!

சிவப்பு எச்சரிக்கை என்பது மிகக்கடுமையான மழைக்கான அதிகபட்ச எச்சரிக்கை ஆகும். இது மக்கள் மற்றும் கால்நடைகளின் வாழ்வுக்கும், பிற சொத்துகளுக்கும் மிகப்பெரும் அபாயம் உள்ளதைக் குறிக்கிறது.

  • தீவிரம்: மிகப்பெரும் கன மழை, பலத்த காற்று, பரந்த அளவிலான வெள்ளம்.
  • அபாய நிலை: கடுமையான வெள்ளம், நிலச்சரிவு, கட்டமைப்புகளில் சேதம்.
  • நடவடிக்கை: அரசாங்க அலுவலர்களின் ஆலோசனைகளை பின்பற்றவும். மேலும், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.

சிவப்பு எச்சரிக்கை கிடைக்கும் போது, உடனடி நடவடிக்கை அவசியம் ஆகும். வெளியில் செல்லாமல், வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது அவசியமாகும்.

இந்த எச்சரிக்கைகள் ஏன் முக்கியம்?

மழை எச்சரிக்கைகள் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவுகின்றன. இந்த எச்சரிக்கைகள் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் ஆளும் அரசுகளுக்கு முன்னே தயாராக இருக்க வாய்ப்பு கிடைக்கிறது. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற எச்சரிக்கைகள் வெவ்வேறு அளவிலான அபாயங்களை குறிக்கின்றன.

  1. மஞ்சள்:விழிப்புணர்வாக இருங்கள்.
  2. ஆரஞ்சு: முக்கிய நடவடிக்கைகளை எடுத்து தயார் செய்யுங்கள்.
  3. சிவப்பு:உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குங்கள்.

இந்த நிறக் குறியீடு மழை எச்சரிக்கைகள் மக்களுக்கும் அலுவலர்களுக்கும் எந்த நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் தெளிவான அறிவுரையை வழங்குகின்றன. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய எச்சரிக்கைகள் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சொத்துகளை பாதுகாக்கவும் முக்கியமான அறிகுறிகளாக விளங்குகின்றன. இந்த எச்சரிக்கைகளை கவனித்து, அரசு கூறும் தகவல்களைக் கேட்டறிந்து பாதுகாப்பாக இருப்பது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details