நிசான் மேக்னைட் வாங்க சரியான நேரம் இது; ரூ.1.25 லட்சம் வரை சலுகைகள்! - Nissan Magnite Offer Price - NISSAN MAGNITE OFFER PRICE
Nissan Magnite Price in India: புதிய நிசான் மேக்னைட் பேஸ்லிஃப்ட் மாடல் காரை அக்டோபர் 4-ஆம் தேதி நிறுவனம் களமிறக்கும் நிலையில், தங்கள் அடிப்படை நிசான் மேக்னைட் காருக்கு சுமார் ரூ.1.50 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளாது.
ஹைதராபாத்: இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் கார்களின் பட்டியலில் நிசான் மேக்னைட் (Nissan Magnite) காருக்கும் ஒரு இடம் உண்டு. குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த காருக்கு நிறுவனம் தற்போது சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய நிசான் பேஸ்லிஃப்ட் மாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், பழைய மாடலுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எனவே, புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்படி, 1.25 லட்ச ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம் என நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிசான் மேக்னைட் முன்புறத் தோற்றம் (Nissan India)
நிசான் மேக்னைட் சலுகை விலை விவரம் (Nissan Magnite Offer Price Details):
மேக்னைட்டின் டர்போசார்ஜ் செய்யப்படாத வேரியன்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது. அடிப்படை மாடலான மேக்னைட் XE வகை, ரூ.60,000 வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை குறித்து விரிவாகப் பார்க்க வேண்டும் என்றால், Magnite XE ஆனது ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையுடன் இருக்கிறது.
கூடுதலாக, இந்த காரைவாங்குபவர்களுக்கு ரூ.5,000 பணம் அல்லது அதற்கு நிகரான உபரி பாகங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மேல், ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்படும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிற டர்போ அல்லாத மேக்னைட் கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கிறது. இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.75,000 வரை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு ரூ.15,000 வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டர்போ-சார்ஜ்டு மாடல்களை குறித்து பார்க்கும்போது, ஆட்டோமேட்டிக், மேனுவல் என அனைத்திற்கும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்மிஷன்
வேரியண்ட்ஸ்
கேஷ்/உபரி பாகங்கள்
எக்ஸ்சேஞ்ச்
கார்ப்பரேட்
மொத்தம்
டர்போசார்ஜ் அல்லாத
XE
ரூ.5,000
ரூ.50,000
ரூ.5,000
ரூ.60,000
பிற மாடல்கள்
ரூ.15,000
ரூ.75,000
ரூ.10,000
ரூ.1,00,000
EZ-ஷிஃப்ட்
அனைத்து மாடல்கள்
ரூ.10,000
ரூ.75,000
ரூ.10,000
ரூ.95,000
டர்போ MT
அனைத்து மாடல்கள்
ரூ.15,000
ரூ.75,000
ரூ.10,000
ரூ.1,00,000
டர்போ CVT
அனைத்து மாடல்கள்
ரூ.15,000
ரூ.75,000
ரூ.10,000
ரூ.1,00,000
இதில் ரூ.75,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.15,000 கார்ப்பரேட் தள்ளுபடிகள் அடங்கும். கூடுதலாக, ரூ.15,000 ரொக்கப் பலன்களும் உண்டு. நிசான் ஏற்கனவே தங்கள் வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 விசுவாச நன்மைகளை (Loyalty Benefits) வழங்குகிறது. இது எல்லா வகை கார்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்னைட் பேஸ்லிஃப்ட்டில் நிறுவனம் எந்த புதிய எஞ்சின் விருப்பங்களையும் அறிமுகம் செய்யாது என்று கூறப்படுகிறது. அதன்படி, முன்னுள்ள அதே இரண்டு பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களை நிசான் தொடர்ந்து வழங்கும். முதலாவது 1.0-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் எஞ்சின் 71 பிஎச்பி (bhp) மற்றும் 96 என்எம் (Nm) டார்க்கை உற்பத்தி செய்கிறது.
இரண்டாவது மற்றும் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் விருப்பமாக இருப்பது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகும், இது 100 bhp மற்றும் 160 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் (AMT) உடன் இணைக்கப்பட்ட நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சினுடன் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் புதிய பேஸ்லிஃப்ட் காரில் அப்படியே இருக்கும்.
முக்கியமாக வாகனத்தில் உள்புறத்தில் தான் நிறுவனம் அதிக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய தோற்றத்தில் டேஷ்போர்டு, சன்ரூஃப், பெரிய தொடுதிரையுடன் (Touch screen) கூடிய இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கும்.