ஹைதராபாத்:சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) இந்தியாவின் சமுத்திரயான் திட்டத்தின் கீழ் MATSYA 6000 நீர்மூழ்கியை உருவாக்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.
இந்த MATSYA 6000 நீர்மூழ்கி இயந்திரம், நீருக்கடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் கோள வடிவில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இது சுமார் 6.6 மீட்டர் நீளமும், 210 டன் எடையும், 6,000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேதியியல் பல்லுயிர் மற்றும் நீர் வெப்ப துவாரங்கள் உள்பட ஆழ்கடல் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களை கடலுக்கடியில் எடுத்து செல்வதே இதன் நோக்கமாக உள்ளது. மேலும், இந்த நீர்மூழ்கி வாயிலாக கடலுக்கு அடியில் இருக்கும் அரிய தாதுக்களையும் ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நீர்மூழ்கி இயந்திரம் நீருக்கடியில் 48 மணிநேர மூழ்கி இருந்து ஆராய்ச்சி செய்யக்கூடியவை. இதை கையாளுபவர்களுக்கான (மனிதன்) இடம், ஆராய்ச்சிக்கான கனிம மாதிரி தட்டு மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இதை கையாளுபவர்களுக்கென 2.1 மீட்டர் உள் விட்டம் கொண்ட தனிப் பகுதி உருவக்கப்பட்டுள்ளது. இந்த நீர்முழ்கி இயந்திரத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் ஊசி அமைப்பு, கார்பன் டை ஆக்சைடு அகற்றும் பொறிமுறை, சென்சார்கள், கட்டுப்பாட்டு வன்பொருள், தீ கண்காணிப்பு, அணைப்பான்கள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கியது.